search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாழை மரங்கள் காய்ந்து கருகும் காட்சி.
    X
    வாழை மரங்கள் காய்ந்து கருகும் காட்சி.

    தஞ்சை மாவட்டத்தில் 144 தடை உத்தரவால் 10 ஆயிரம் ஏக்கர் வாழை சாகுபடி நாசம்

    தஞ்சை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து உணவங்களும் மூடப்பட்டதால் வாழை இலை அறுவடை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக வாழை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இங்கு அறுவடை செய்யப்படும் வாழை இலை மற்றும் வாழைத்தார்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து உணவங்களும் மூடப்பட்டதால் வாழை இலை அறுவடை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால், இழையானது மரங்களிலே பழுத்து, காய்ந்து மட்டையாக கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஏக்கருக்கு 2 லட்சம் வரை செலவு செய்து ஓராண்டு காலமாக பிள்ளைகளை வளர்ப்பது போது வளர்த்து வந்த வாழை மரங்கள் தங்கள் கண் முன்னே காய்ந்து கருகி வருவது வேதனை அளிப்பதாகவும், ஓராண்டு காலமாக எந்த பலனும் அனுபவிக்காமல், மகசூல் பெறவேண்டிய இந்த காலகட்டத்தில் தற்போது அறுவடை செய்ய முடியாமல் பரிதவித்து நிற்பதாகவும் இதனால் வாழை இலை காய்ந்து மட்டையாகி கிடக்கிறது, மேலும் வாழைத்தார்களும் விற்பனை இல்லாமல் மரங்களிலே பழுத்து அழுகும் சூழல் ஏற்பட்டு, பறவைகளுக்கு உணவாக போகின்றது என கண்ணீர்விடுகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு 10 லட்சம் ஏடுகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தடை உத்தரவால் காய்ந்து மட்டையாகி போன வாழை இலைகளை சுத்தம் செய்வதற்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படும் அவ்வாறு செய்தும் தங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. எனவே தமிழக அரசு வாழை விவசாயிகள் மீது உரிய கவனம் செலுத்தி வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×