search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு அவசர கால விமான சேவை

    மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானத்தின் சேவை மட்டும் அவசரகால சேவையாக வருகிற ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு சேவை இயக்கப்பட இருக்கிறது.
    திருச்சி:

    கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமானத்தின் சேவை மட்டும் அவசரகால சேவையாக வருகிற ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து சிறப்பு சேவை இயக்கப்பட இருக்கிறது.

    இந்த விமானம் மலேசியாவில் இருந்து ஏப்ரல் 1-ந்தேதி இரவு 10.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 11.25 மணிக்கு மலேசியா நோக்கி செல்கிறது.

    இதேபோன்று ஏப்ரல் 2 மற்றும் 3-ந்தேதிகளில் காலை 9.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு காலை 10.25 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சிக்கு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வந்து மீண்டும் மலேசியாவுக்கு திரும்ப முடியாமல் 100-க்கும் மேற்பட்டோர் தனியார் ஓட்டல்களில் தங்கியுள்ளனர்.

    அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும், கையிருப்பு கரைந்து தவித்து வருகிறார்கள். அவர்கள் எப்படியாவது தங்களை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வந்த நிலையில் அவசர கால தேவையாக இந்த விமானம் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து பயணிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மலேசியாவுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
    Next Story
    ×