search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம்

    கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து சோதனை, சிகிச்சைகளும் மேற்கொள்ள பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரி மற்றும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களை சோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகள் வந்து செல்கின்றனர். 2 ஆயிரம் பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு தனியாக சோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான வசதி செய்ய வேண்டியது அவசியம் ஏற்பட்டது.

    எனவே, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து சோதனை, சிகிச்சைகளும் மேற்கொள்ள பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் அறிகுறிக்கு காரணமான சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல், மூச்சு திணறல் போன்றவைகள் இருந்தால் நேரடியாக சிங்காநல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு சென்று அணுகி சோதனை செய்து சிகிச்சை பெறலாம்.

    இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    Next Story
    ×