search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சினிமா பாணியில் குற்றவாளியை விரட்டி பிடித்த போலீசார் - உதவிய ஊராட்சி தலைவருக்கு பாராட்டு

    சினிமா பாணியில் குற்றவாளியை விரட்டி சென்று பிடித்த போலீசாரையும் அவர்களுக்கு உதவிய ஊராட்சி தலைவரையும் போலீஸ் கமி‌ஷனர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தகுமார், சுரேஷ் மற்றும் போலீசார் ஸ்ரீதர், சுரேஷ்பாபு, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த எல்லப்பன் ஆகியோர் சென்னீர் குப்பம்-ஆவடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தியபோது நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஆட்டோவை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றனர்.

    அப்போது போலீஸ்காரர் ஸ்ரீதர் மற்றும் ஊர்காவல்படை போலீஸ்காரர் எல்லப்பன் ஆகியோர் தவறி கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டது.

    இதற்கிடையே போலீசார் விரட்டி செல்வதை பார்த்த அவ்வழியே காரில் வந்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிகேசவனும் தனது வண்டியில் ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார்.

    சுமார் 7 கிலோ மீட்டர் துரத்தலுக்கு பின்னர் ஊராட்சி தலைவர் ஆதிகேசவன் தனது காரை ஆட்டோ முன்பு மறித்து நிறுத்தினார்.

    உடனே ஆட்டோவில் இருந்த 4 பேரில் 3 பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதற்குள் அங்கு வந்த போலீசார் ஒருவனை மட்டும் மடக்கி பிடித்தனர். அவன் சென்னீர்குப்பத்தை சேர்ந்த மாலிக் பாஷா என்பதும் தப்பிச் சென்றவர்கள் அவனது கூட்டாளிகளான ராஜேஷ், சபரி, செல்வம் என்பது தெரிந்தது.

    ஆட்டோவில் இருந்து 2 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மாலிக் பாட்ஷாவும் அவனது கூட்டாளிகளும் வழிப்பறி குற்றவாளிகள்.

    இது தொடர்பாக பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இதற்கிடையே மாலிக் பாட்ஷா கொடுத்த தகவலின் படி தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முனுசாமியை போலீசார் கைது செய்தனர்.

    சினிமா பாணியில் குற்றவாளியை விரட்டி சென்று பிடித்த போலீசாரையும் அவர்களுக்கு உதவிய ஊராட்சி தலைவர் ஆதிகேசவனையும் போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
    Next Story
    ×