search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தூத்துக்குடி வந்த கப்பலில் இருக்கும் சீன மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை

    தூத்துக்குடி வந்த கப்பலில் இருக்கும் சீன மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி:

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நாடுகள் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தி உள்ளது. அதேபோன்று சீனாவில் இருந்து வரும் கப்பல் மாலுமிகளை இந்திய துறைமுகங்களில் தரையிறங்க அனுமதிக்க கூடாது என்று மத்திய கப்பல்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு சீன துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்கள் மற்றும் சீன மாலுமிகளுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா? என்று முழு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றாலை உபகரணங்களை ஏற்றி கொண்டு சீனாவில் இருந்து வந்த கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட ஹன்னா என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் இந்தோனேஷியா பாதம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 21 மாலுமிகள் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சுகாதார அதிகாரி தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கப்பலில் இருந்த மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்புகள் உள்ளதா? என்று பரிசோதனை நடத்தினர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

    இதையடுத்து கப்பல் துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டு சரக்கை இறக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சரக்குகள் இறக்கும் பணி விரைவாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சரக்குகள் இறக்கப்பட்ட பின்பு கப்பல் சீனாவிற்கு திருப்பி அனுப்பப்படும். அதுவரை கப்பலில் இருந்து சீன மாலுமிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் இறங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×