search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில்
    X
    மெட்ரோ ரெயில்

    இன்று முதல் மெட்ரோ ரெயிலில் சினிமா பார்க்கலாம்

    மெட்ரோ ரெயிலில் ‘ஸ்மார்ட்’ போன் மூலம் பயணிகள் சினிமா மற்றும் பாடல்கள் பார்க்கும் வசதியை மெட்ரோ நிறுவனம் இன்று முதல் தொடங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்கு வரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகளை மெட்ரோ ரெயில் நிறுவனம் செய்து வருகிறது.

    இந்த நிலையில் ஓடும் மெட்ரோ ரெயிலில் ‘ஸ்மார்ட்’ போன் மூலம் பயணிகள் சினிமா மற்றும் பாடல்கள் பார்க்கும் வசதியை மெட்ரோ நிறுவனம் இன்று முதல் தொடங்கி உள்ளது.

    மெட்ரோ ரெயில் நிறுவனம் வீடியோ ஸ்டிரி மிங் ஆப் மூலம் ஸ்மார்ட் போனில் பல மொழிகளில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

    இதன் மூலம் மெட்ரோ ரெயில் நிலையங்கள், ஓடும் மெட்ரோ ரெயில்களில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு செயல்படும். இதில் சினிமா படங்கள், வீடியோ பாடல்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு வசதிகளை பயணிகள் பார்க்கலாம்.

    ‘சுகர்பாக்ஸ்’ என்ற தலைப்பில் உள்ள ஆன்லைன் ஆப் பயன்பாடு மூலம் எந்தவித இடையூறுமின்றி மெட்ரோ ரெயில் பயணிகள் பொழுது போக்கு வசதியை பெற முடியும். சென்ட்ரல்-விமான நிலையம் வரையிலான வழித்தட மெட்ரோ ரெயிலில் இந்த வசதியை பயணிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

    தமிழ், ஆங்கில, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த வசதியை பெறலாம். விரைவில் வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையத்துக்கும் இந்த வசதி நீடிக்கப்பட உள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயிலில் ‘வைபை’ இணைய தள வசதி விமானத்தில் உள்ள பொழுதுபோக்குக்கு இணையாக செயல்படும் ஒரு சில நிமிடங்களில் பயணிகள் ஒரு திரைப்படத்தை பதிவிறக்கம் செய்யலாம். ‘வைபை’ இன்டர்நெட் மூலம் போன் பேச முடியாது. பொழுதுபோக்கு வசதிகளை பார்த்து ரசிக்க முடியும்.

    மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த ‘ஆப்’ வசதி சிறந்த பொழுதுபோக்கு வசதியை உருவாக்கி தரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×