என் மலர்

  செய்திகள்

  பீடம் மற்றும் சிறிய மண்டபம் இடிக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டு இருக்கும் காட்சி.
  X
  பீடம் மற்றும் சிறிய மண்டபம் இடிக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டு இருக்கும் காட்சி.

  மன்னார்குடி அருகே கோவில் உண்டியல் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மன்னார்குடி அருகே கோவில் உண்டியலை திருடி சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
  மன்னார்குடி:

  மன்னார்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை தெற்கு தெருவில் மாயக்காத்தான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார்.

  இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கருணாகரன் கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார். அப்போது கோவிலின் வாசலில் இருந்த உண்டியலை சேர்த்து கட்டப்பட்டிருந்த பீடம் மற்றும் சிறிய மண்டபம் இடிக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இது குறித்து ஊர் மக்களிடம் அவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கருணாகரன் மன்னார்குடி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், கோவில் உண்டியலை திருடி சென்றதாக அதே கிராமத்தை சேர்ந்த பிரபு, பார்த்திபன், அறிவழகன், வீரமணி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
  Next Story
  ×