search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாபாரிகளால் களை கட்டிய புளிச்சந்தை
    X
    வியாபாரிகளால் களை கட்டிய புளிச்சந்தை

    திண்டுக்கல்லில் வியாபாரிகளால் களை கட்டிய புளிச்சந்தை

    திண்டுக்கல்லில் வியாபாரிகள் வரத்து குறைந்த போதிலும் புளிச்சந்தையில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சாணார்பட்டி, கோபால்பட்டி, மருனூத்து, கொசவபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் புளிய மரங்கள் அதிக அளவில் வளர்த்து பராமரிக்கப்படுகின்றன. இவை சொந்தமாகவும் பல மரங்கள் குத்தகைக்கு விட்டும் வளர்க்கப்படுகிறது. ஆண்டு தோறும் இரு முறை புளியம்பழங்கள் உலுக்கி பின்னர் தரம் பிரிக்கப்பட்டு வியாபாரிகளால் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

    பெரும்பாலான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் திண்டுக்கல் நாகல்நகரில் விற்பனைக்கு வருவார்கள். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும் பொதுமக்களும் நேரடியாக வந்து புளியம்பழங்களை வாங்கிச் செல்வார்கள்.

    தற்போது நாகல் நகரில் 10-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் புளியம் பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். தரத்துக்கு ஏற்றவாறு கிலோ ரூ.40 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    விவசாயிகளிடம் நேரடியாக வாங்கப்படுவதால் விலை குறைவாக இருப்பதுடன் நீண்ட நாட்கள் வைத்து பயன்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும். இதனால் சந்தையில் ஏராளமான பொதுமக்கள் புளி வாங்கிச் சென்றனர்.

    இந்த சந்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால் வியாபாரம் வரும் நாட்களில் மேலும் விறுவிறுப்படையும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×