search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல்
    X
    பெட்ரோல், டீசல்

    பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருள் அறிமுகம்

    தென் இந்தியாவிலேயே முதன் முறையாக நாமக்கல்லில் பெட்ரோல், டீசலுக்கு பதிலாக மாற்று எரிபொருளை பயன்படுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் அகில இந்திய பெட்ரோல் வினியோகஸ்தர்கள் மற்றும் மதுரை , திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த வினியோகஸ்தர்கள் பங்கேற்ற 2 நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் மத்திய அரசின் மாசற்ற எரிபொருள் பயன்பாடு குறித்து வினியோகஸ்தர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாக கண்டுபிடிக்கபட்டுள்ள சல்பர் இல்லாத இயற்கை எரிவாயு, சுருக்கப்பட்ட உயிர்வாயு எனப்படும் விவசாயத்தில் இருந்து பெறகூடிய கழிவு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட எரிவாயுவினை வாகனங்களுக்கு செலுத்தி இயக்ககூடிய திரவம் ஆகும். இதனைக் கொண்டு இயக்கும் பொழுது மாசு முழுவதுமாக கட்டுபடுத்த முடிவதுடன் பெட்ரோல், டீசலை விட 40 சதவீதம் விலை குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த திட்டத்தை இதுவரை இந்தியாவில் புனே, டெல்லி போன்ற நகரங்களில் அமல்படுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளதாகவும் தென்னிந்தியாவில் முதல்முறையாக நாமக்கல்லில் மார்ச் மாதம் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனவும், இத்திட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவில் சுற்றுசூழலை பாதுகாக்க முடியும் என்றும், வருங்கால இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு போட்டியாகவும் விவசாயத்தின் கழிவு பொருட்களை வீணாக்காமல் செயல்படுத்தவும் முடியும் என தெரிவித்தனர்.

    இது குறித்து அகில இந்திய பெட்ரோல் வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அஜய் போன்சா கூறுகையில், இந்தியா பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளில் வாங்குவதற்காக அதிக அளவு செலவு செய்ய வேண்டியது உள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜி.என்.ஜி எனப்படும் இயற்கை எரிவாயு ஜி.பி.ஜி எனப்படும் சுருக்கப்பட்ட உயிர் வாயு திரவங்கள் ஏற்கனவே வட மாநிலங்களில் விற்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் தென் இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் நாமக்கல்லில் தொடங்கப்பட உள்ளது.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானலிலும் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படும். இத்திட்டம் வெற்றி பெற்றால் விரைவில் இது நாடு முழுவதும் அமல்படுத்தப்படும். இதன் மூலம் எரிவாயுவினால் ஏற்படக்கூடிய மாசு மிகவும் குறையும் என கூறினார். பேட்டியின் போது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் பசாய், ஒருங்கிணைப்பாளர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×