search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோசடி
    X
    மோசடி

    ஜவுளிக்கடையில் பங்குதாரர் ஆக்குவதாக பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி

    ஜவுளிக்கடையில் பங்குதாரர் ஆக்குவதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    வடபழனி, அழகர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வனிதா. இவர் வடபழனி போலீசில் புகார் மனு அளித்தார்.

    நான் கணவருடன் சேர்ந்து சொந்தமாக ஜூஸ் கடை நடத்தி வருகிறேன். கடந்த ஆண்டு ஜூன் மாதம் பக்கத்து வீட்டு தோழி ஒருவர் மூலமாக தேவி என்பவர் எனக்கு அறிமுகமானார்.

    அப்போது அவர் ஏற்கனவே 3 துணிக்கடை நடத்தி வருவதாக கூறினர். 4-வதாக வடபழனி சிவன் கோவில் தெருவில் துணிக்கடை தொடங்க உள்ளதாகவும் கூறினார்.

    பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு பணம் முதலீடு செய்தால் கடையில் என்னை பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக ஆசை வார்த்தை தெரிவித்தார். இதை உண்மை என்று நம்பி மூன்று தவணையாக ரூ. 30 லட்சம் பணத்தை தேவியிடம் கொடுத்தேன்.

    ஆனால் தேவி சொன்னபடி துணிக்கடை தொடங்கவில்லை. தேவியை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது .

    சந்தேகமடைந்த நான் தேவி கடை தொடங்கவுள்ளதாக என்னிடம் காட்டிய இடத்தின் உரிமையாளரிடம் சென்று விசாரித்தபோது தேவி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவானது தெரியவந்தது. ஆகவே தேவி மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×