search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் கேடி ராஜேந்திர பாலாஜி

    மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா பணிகள் தீவிரம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டார்

    விருதுநகரில் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழா ஏற்பாட்டு பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி கட்டப்படவுள்ளது. இந்த அரசு மருத்துவக்கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 1-ந்தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு வருகிறார். மேலும், இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து, சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    இவ்விழாவிற்கான பிரமாண்ட விழா மேடை அமைத்தல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளி பெருமக்கள் அமர்வதற்கான பந்தல், பல்வேறு துறைகள் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு, விழா ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களை அழைத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் உள்பட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×