search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ கல்லூரி"

    • பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
    • மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    சங்கராபுரம்:

    என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

    சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.
    • 100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய கட்டடம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியை தற்காலிக கட்டடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    மேலும், வாடகை கட்டடத்திற்கான டெண்டரை எய்ம்ஸ் நிர்வாகம் கோரியுள்ளது.

    ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை மதுரையில் தற்காலிக கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    100 மாணவர்கள் பயிலும் வகுப்பறை, விடுதிகள், மைதானம் உள்ளடக்கிய தற்காலிக வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஓராண்டுக்கு தற்காலிகமாக மதுரையில் வாடகை கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், மதுரை தோப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார்
    • முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு

    திருவட்டார், நவ.19-

    குமரி மாவட்டம் குலசே கரம் நாகக்கோடு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முதுநிலை மருத்துவ பயிற்சி மாணவி சுகிர்தா தற்கொலை செய்துகொண் டார்.

    இவர் தற்கொலை செய்வதற்கு முன் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் பேராசிரியர் பரமசிவன் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும், பயிற்சி மருத்துவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோர் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார். இந்த சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரப்பரப்பானது குலசே கரம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாண வர்களின் போராட்டம் எதிரொலியாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட் டது.

    இதில் டாக்டர் பரமசிவன் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். ப்ரீத்தி, ஹரிஷ் ஆகிய 2 பேரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி நேரடியாக விசாரித்தனர். இவர்களும் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று முன்னாள் மாணவர்களின் பதிவேடுகள், அவர்களின் சான்றிதழ்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்து விசாரித்தனர். கல்லூரி நிர்வாகத்தின ரிடமும் கிடுக்கிப்பிடி விசா ரணை மேற்கொண்டனர்.

    இந்த வழக்கு சம்மந்தமாக இதுவரை சுமார் 70 பேரிடம் விசாரணை செய்துள்ளனர்.

    • தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.
    • சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாநகராட்சி சின்ன காஞ்சிபுரம் திருச்சோலை தெரு பகுதியைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (வயது 75). இவருக்கு முரளிதரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சமுதாய கரையோடு வாழ்ந்தவரான திருவேங்கடம், தான் இறந்து போனால் தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்கிட வேண்டும் என தனது மகன் முரளிதரன் மற்றும் குடும்பத்தாரிடம், நண்பர்களிடமும் தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திருவேங்கடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவேங்கடத்தின் கடைசி ஆசையை நிறை வேற்றிடும் வகையில் உறவினர்களுடனும், நண்பர்களுடனும், கலந்து ஆலோசனை செய்த குடும்பத்தினர் முதியவர் திருவேங்கடத்தின் உடலை வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கு தானம் வழங்க முடிவு செய்து, தகவல் தெரிவித்து அதற்குண்டான ஆவணங்களில் கையெழுத்திட்டனர்.

    அதன்படி திருவேங்க டத்தின் உடலுக்கு உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் குடும்பத்தினர் சம்பிரதாயம் முறைப்படி இறுதி சடங்குகளை செய்த பின்னர் சிறிது தூரம் முதியவர் திருவேங்கடத்தின் உடலை எடுத்துச் சென்று தயாராக இருந்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆம்பு லன்சில் ஒப்படைத்தனர். சமூக அக்கறையோடு வாழ்ந்த முதியவரின் கடைசி ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு முதியவரின் உடலை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது.
    • கல்வி கட்டணத்துடன் ஜி.எஸ்.டி. வரியும் வசூல் செய்யவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கல்வி கட்டணம் உயர்ந்துள்ளது.

    கல்வி கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரியும் வசூல் செய்ய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.

    எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ.6,000, சிறப்பு கட்டணமாக ரூ.2,000, பல்கலைக்கழக கட்டணமாக ஜிஎஸ்டி உட்பட ரூ.7,473 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    • நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது.
    • 38 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு பிறகு நாடு முழுவதும் 102 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    புதுடெல்லி:

    நாடுமுழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இதுதொடர்பாக ஆய்வு, சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே நாடு முழுவதும் 38 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. இதில் தமிழ்நாட்டில் சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி, திருச்சி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகளும் அடங்கும்.

    சி.சி.டி.வி. கேமரா பொருத்தாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறை இல்லாதது, போதுமான பேராசிரியர்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளால் இக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் 38 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு பிறகு நாடு முழுவதும் 102 மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை பதிவை செயல்படுத்த தவறியதற்காக இக்கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கட்டாய பயோமெட்ரிக் வருகைக்கான விதிமுறைகளை இந்த கல்லூரிகள் பின்பற்றவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையம் நடத்திய ஆய்வில் கல்லூரிகளின் பெரும்பாலான ஆசிரிய உறுப்பினர்கள், டீன், முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் கூட பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை குறிப்பிடவில்லை.

    மருத்துவ கல்லூரிகளில் கண்காணிப்பு கேமராக்கள் ஆப் செய்யப்பட்டு அல்லது இணைக்கப்படாமல் இருந்தன. 390-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் பெற உள்ளன. அதில் 256 கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

    அதிகாரிகள் 175 விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்து 25 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 38 விண்ணப்பங்கள் ஏற்கப் படவில்லை.

    102 கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 10 மருத்துவ கல்லூரிகளின் விண்ணப்பங்கள் தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது.
    • மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து 99 ஆயிரத்து 763 ஆக அதிகரிப்பு.

    இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 40 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தேசிய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுதவிர தமிழ் நாடு, குஜராத், அசாம், பஞ்சாப், ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் செயல்பட்டு வரும் சுமார் 100-க்கும் அதிக மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு முதல் இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து இருக்கிறது.

    2014-ம் ஆண்டுக்கு முன்பு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 387 ஆக இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி பாரதி பிரவீன் பவர் மாநிலங்களவையில் தெரிவித்தார். இதே போன்று 2014-ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 348-இல் இருந்து தற்போது 99 ஆயிரத்து 763 ஆக அதிகரித்து இருக்கிறது.

    மருத்துவ மேற்படிப்புக்கான சீட்களின் எண்ணிக்கை 2014-இல் 31 ஆயிரத்து 185-இல் இருந்து தற்போது ரூ. 64 ஆயிரத்து 559 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் மருத்துவ கல்லூரிகள் மற்றும் எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது குறித்து மருத்துவ துறையை சேர்ந்த வல்லுனர்கள் கூறும் போது,

    'தேசிய மருத்துவ கவுன்சில் ஆதார் சார்ந்த பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டை சார்ந்து இருக்கிறது. ஆனால் மருத்துவர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப்படாத சூழலே நிலவுகிறது. அவர்கள் இரவு நேரம் மற்றும் அவசர காலங்களிலும் பணியாற்ற வேண்டும். இதனால் தேசிய மருத்துவ கவுன்சில், பணி நேரத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி வருகிறது. மருத்துவ கல்லூரிகளின் நிர்வாகம் நடைமுறைக்கு உகந்ததாக இல்லை, இதனால் தேசிய மருத்துவ கவுன்சில் இதனை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது,' என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து மற்றொரு வல்லுனர் கூறும் போது, 'மருத்துவ கல்லூரிகளில் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தாலேயே தேசிய மருத்துவ கவுன்சில் அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்து வருகிறது. இதுதவிர இதுபோன்ற கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் முரணாக இருக்கிறது. இது உலகளவில் நாட்டின் நற்பெயரை பாதித்து விடும். உலகளவில் அதிக மருத்துவர்களை உருவாக்கும் நாடு இந்தியா. இது போன்ற சம்பவங்கள் வெளியுலகிற்கு வரும் போது, இந்திய மருத்துவர்கள் மீதான நம்பிக்கை உலகளவில் பாதிக்கப்பட்டு விடும்,' என்றார்.

    • பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கிட மாக யாரோ சுற்றி வருவதை பார்த்தனர்.
    • விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் என தெரிய வந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குலசே கரம் அருகே ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு தினமும் ஏராள மானோர் உள் மற்றும் வெளி நோயாளியாக வந்து செல்கின்றனர்.

    இதனால் ஆஸ்பத்திரி யில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர். நேற்று அவர்கள் பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கிட மாக யாரோ சுற்றி வருவதை பார்த்தனர்.

    பர்தா அணிந்தவர் ஆஸ்பத்திரியின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால், அவர் தீவிரவாத செயலில் ஈடுபட வந்திருக்கலாமோ என காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பர்தா அணிந்து திரிந்தவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் எந்தவித பதிலும் அளிக்காததால், பர்தாவை விலக்கி பார்த்தபோது, வாலிபர் ஒருவர் தான் பர்தா அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் என தெரிய வந்தது.

    அவரது காதலி குலசே கரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் தங்கி படிப்பதாகவும் அவரை பார்க்க வந்ததா கவும் தெரிவித்தார். கல்லூ ரிக்கு வெளியே நின்று கொண்டு தான் காதலிக்கும் பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டபோது, டவர் கிடைககாததால் பர்தா அணிந்து சென்று சந்திக்க முயன்றதாகவும் வாலிபர் தெரிவித்தார்.

    இது குறித்து ஸ்ரீமூகாம்பி கா மருத்துவக் கல்லூரி சார்பில் குலசேகரம் போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி னர்.

    அப்போது அந்த வாலிபர், கோழிக்கோடு பகுதியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருவ தாகவும், தன் காதலியிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும், அவரை பார்க்க கல்லூரிக்குள் நேரடியாக சென்றால் முடியாது என்பதால் கேரளா வில் இருந்து வரும்போதே கடைக்கு சென்று பர்தா வாங்கி வந்ததாகவும் தெரி வித்தார்.

    இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக குலசேகரம் போலீஸ் நிலையம் வந்தனர்.தங்கள் மகனின் செயல் தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வாலிபரை அழைத்து சென்றனர். வாலிபர் பர்தா அணிந்து மருத்துவக் கல்லூரிக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திருமங்கலம் ஓமியோபதி மருத்துவ கல்லூரியில் கண்மாய் நீர் சூழ்ந்தது.
    • இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் 4 வழிச்சாலை செல்கிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் என்.ஜி.ஓ. காலனியில் அரசு ஓமியோபதி மருத்துவ கல்லூரி- மருத்துவமனை அமைந்துள்ளது. இதில் 250 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியையொட்டி மதுரை- விருதுநகர் நான்கு வழிச்சாலை செல்கிறது. சாலை உயரம் அடைந்தததால் கல்லூரி வளாகம் தாழ்வானது. மழைக்காலத்தில் அருகே உள்ள மறவன்குளம் கண்மாய் நிரம்பி குட்டி நாயக்கனூர் கண்மாய்க்கு வரும்போது ஓமியோபதி கல்லூரி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் ஓமியோபதி கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 2 மாதத்திற்கு மேல் வகுப்புகள் நடந்தன. இந்த ஆண்டும் உரப்பனூர் கண்மாய், மறவன்குளம் கண்மாய் உள்ளிட்ட திருமங்கலத்தை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் குட்டிநாயக்கனூர் கண்மாய்க்கு தண்ணீ்ர் செல்ல தொடங்கியது.

    இதனால் அரசு ஓமியோபதி கல்லூரி வளாகத்தில் கண்மாய் நீர் சூழ்ந்தது. கண்மாய் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தால் கடந்தாண்டு போல் கல்லூரி வளாகம் முழுவதும் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்படும். இது ஓமியோபதி மருத்துவ மாணவ- மாணவிக ளிடையேய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில்,2 தினங்களாக கண்மாய்க்கு தண்ணீர் வரத்து தொடங்கி உள்ளது. நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார்.
    • இந்தியாவில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் நாயகம். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் வில்லியம்.

    இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு படித்த போது போர் ஏற்பட்டதால் இந்தியா திரும்பினார். இதுதொடர்பாக இந்தியா வில் மற்றொரு தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கி பயின்று வந்தார்.

    இதற்கிடையே தனது நண்பர்கள் 6 பேருடன் இருசக்கர வாகனத்தில் இமாச்சலபிரதேசத்துக்கு சுற்றுலா சென்றார். அப்போது அங்கு எதிர்பா ராத விதமாக ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் மாணவன் வில்லியம் பரிதா பமாக பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது தந்தை வெளி நாட்டிலிருந்து தாயகம் வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. விபத்தில் பலி யான மாணவர் வில்லியமின் தாயார் ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து போனார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்

    ×