search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசேகரம் அருகே உள்ள ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த வாலிபரால் பரபரப்பு - தீவிரவாத செயலுக்கு திட்டமிட்டாரா? போலீஸ் விசாரணை
    X

    குலசேகரம் அருகே உள்ள ஸ்ரீமூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த வாலிபரால் பரபரப்பு - தீவிரவாத செயலுக்கு திட்டமிட்டாரா? போலீஸ் விசாரணை

    • பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கிட மாக யாரோ சுற்றி வருவதை பார்த்தனர்.
    • விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் என தெரிய வந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் குலசே கரம் அருகே ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு தினமும் ஏராள மானோர் உள் மற்றும் வெளி நோயாளியாக வந்து செல்கின்றனர்.

    இதனால் ஆஸ்பத்திரி யில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப் பட்டு உள்ளனர். நேற்று அவர்கள் பணியில் இருந்த போது பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கிட மாக யாரோ சுற்றி வருவதை பார்த்தனர்.

    பர்தா அணிந்தவர் ஆஸ்பத்திரியின் பல பகுதிகளுக்கும் சென்று வந்ததால், அவர் தீவிரவாத செயலில் ஈடுபட வந்திருக்கலாமோ என காவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பர்தா அணிந்து திரிந்தவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் எந்தவித பதிலும் அளிக்காததால், பர்தாவை விலக்கி பார்த்தபோது, வாலிபர் ஒருவர் தான் பர்தா அணிந்து வந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் என தெரிய வந்தது.

    அவரது காதலி குலசே கரம் ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் தங்கி படிப்பதாகவும் அவரை பார்க்க வந்ததா கவும் தெரிவித்தார். கல்லூ ரிக்கு வெளியே நின்று கொண்டு தான் காதலிக்கும் பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டபோது, டவர் கிடைககாததால் பர்தா அணிந்து சென்று சந்திக்க முயன்றதாகவும் வாலிபர் தெரிவித்தார்.

    இது குறித்து ஸ்ரீமூகாம்பி கா மருத்துவக் கல்லூரி சார்பில் குலசேகரம் போலீ சாருக்கு தகவல் கொடுக்க ப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி னர்.

    அப்போது அந்த வாலிபர், கோழிக்கோடு பகுதியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வருவ தாகவும், தன் காதலியிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும், அவரை பார்க்க கல்லூரிக்குள் நேரடியாக சென்றால் முடியாது என்பதால் கேரளா வில் இருந்து வரும்போதே கடைக்கு சென்று பர்தா வாங்கி வந்ததாகவும் தெரி வித்தார்.

    இதனை தொடர்ந்து மாணவரின் பெற்றோருக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக குலசேகரம் போலீஸ் நிலையம் வந்தனர்.தங்கள் மகனின் செயல் தவறு என்று மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு வாலிபரை அழைத்து சென்றனர். வாலிபர் பர்தா அணிந்து மருத்துவக் கல்லூரிக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×