search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கோவை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 286 மாணவர்கள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

    தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பிற்கு மார்ச் 2-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் கோவை மாவட்டத்தில் 34, ஆயிரத்து 286 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் 10,11,12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படவுள்ளது. அதன்படி, 12-ம் வகுப்பிற்கு  மார்ச் 2-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. இதில் 34, ஆயிரத்து 286 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

    11-ம் வகுப்பிற்கு மார்ச் 4-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பிற்கு மார்ச் 27-ந் முதல் ஏப்ரல் 13-ந்தேதி வரையும் நடத்தப்படவுள்ளது. பொது தேர்வர்கள் காப்பியடிப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை வருவாய் மாவட்டத்தில் கோவை, பேரூர், எஸ்.எஸ்.குளம், மற்றும் பொள்ளாச்சி என 4 கல்வி மாவட்டங்கள் உள்ளது.

    பள்ளி மற்றும் தனித்தேர்வர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு சார்பாக தேர்வுத்துறையின் வழிகாட்டுதலின் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, பொறுப்புகள் மற்றும் கடமைகள் பற்றி விரிவாக எடுத்துரைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பொதுத்தேர்வினை எழுதும் அனைத்தும் மாணவ, மாணவிகளும் தேர்வு எழுதுவதற்கு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம துரைமுருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் பிரசன்னா ராமசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்( பொது) உமாமகேஸ்வரி, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×