search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி
    X
    இந்திய கம்யூனிஸ்டு கட்சி

    துறையூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    துறையூர்:

    துறையூர் பஸ் நிலையத்தில் உள்ள அண்ணா சிலை முன்பு மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச்செயலாளர் சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம் முன்னிலை வகித்தார். 

    இச்சட்டத்தால் இந்திய முஸ்லிம்கள் ,இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும், மேலும் இதை நிறைவேற்றினால் இந்தியாவிலுள்ள இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள் எனவும் கூறி கோஷம் எழுப்பினர். 

    தமிழக சட்டமன்றத்தில் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன், லெனின், மாவட்ட செயலாளர் இந்திரஜித், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கணேசன், செல்வராஜ், பழனிசாமி மற்றும் ரஹ்மத், தினேஷ் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×