search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலைவாய்ப்பு முகாம்
    X
    வேலைவாய்ப்பு முகாம்

    ராணிப்பேட்டையில் வருகிற 29-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம்

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக லெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 29-ந்தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆற்காடு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்தபட உள்ளது.

    இம்முகாமில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் கலந்து கொள்ள உள்ளனர். இம்முகாமில் தனியார் நிறுவனங்களான டி.வி.எஸ்., ஹூண்டாய், கோபைன், நிப்பான் ஸ்டீல் போன்ற 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்து பணி நியமனம் செய்ய உள்ளனர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் 10, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ. டிப்ளமோ, டிகிரி, என்ஜினீயரிங் வங்கி உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய வேலை தேடுபவர்கள், கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான வேலையினை தங்கள் அளவிலேயே தேர்வு செய்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்துள்ள பொது மற்றும் ஓராண்டிற்கு மேல் உயிர்பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பங்கள் இம்முகாமில் வழங்கிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    விருப்பமுள்ள பதிவுதாரர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களை சமர்பித்து விண்ணப்பத்தினை பெற்று பயன்பெறலாம்.

    விருப்பமும் தகுதியும் உள்ள வேலை தேடுபவர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், பயோடேட்டா, மற்றும் அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×