search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பிளாஸ்டிக் பை விற்பனை - 3 குடோன்களுக்கு ‘சீல்’ வைப்பு

    பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்தது தொடர்பாக 3 குடோன்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உள்ளதா என அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

    இதனிடையே பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகராட்சி கமி‌ஷனர் டிட்டோ தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் பணியாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன் சாவடியில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் 3 கடைகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான குடோன்களிலும் தடைச்செய்யப்பட்ட பிளாஸ்டிக் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 3 குடோனிலிருந்து சுமார் 1000 கிலோ பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 3 குடோன்களுக்கும் சீல் வைத்தனர்.

    ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தொடர்ந்து பயன்படுத்தினால் அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடரும் என நகராட்சி ஆணையர் டிட்டோ தெரிவித்தார்.
    Next Story
    ×