search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் ரஜினிக்கு நிகர் விஜய் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டிகள் இன்று தொடங்கியது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பட்ஜெட் வரி விதிப்பு இல்லாத பட்ஜெட். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத முத்தான பட்ஜெட். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வின் கடைசி பட்ஜெட் இது என்று கூறி இருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வின் அடுத்த 5 ஆண்டுக்கான முதல் பட்ஜெட் இதுவாகும்.

    நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் தலையீடு இல்லை.

    நடிகர் விஜய், ரஜினிக்கு நிகரான நடிகர் இல்லை. அஜித் ‘தல’, ரஜினி ‘மலை’.

    விருதுநகரில் மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விழாவில் முதல்- அமைச்சர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.390 கோடியில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×