search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கட்சி அலுவலகத்தில் தேமுதிக கொடியை ஏற்றிய விஜயகாந்த்.
    X
    கட்சி அலுவலகத்தில் தேமுதிக கொடியை ஏற்றிய விஜயகாந்த்.

    கோயம்பேட்டில் 118அடி உயர கம்பத்தில் விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றினார்

    20-ம் ஆண்டு கொடி நாளையொட்டி இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 118அடி உயர கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை விஜயகாந்த் ஏற்றினார்.
    போரூர்:

    விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி 12-ந்தேதி சிவப்பு, மஞ்சள், கருப்பு ஆகிய மூவர்ணத்துடன் நீல நிறத்தில் ஜோதியை கையில் ஏந்தியபடி உள்ள புதிய கொடியை அறிமுகப்படுத்தினார்.


    பின்னர் 2005-ம் ஆண்டு ரசிகர் மன்றம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக மாறியது.

    அப்போது ரசிகர் மன்ற கொடியையே கட்சியின் கொடியாக விஜயகாந்த் அறிவித்தார். கொடி அறிமுகப்படுத்திய பிப்ரவரி 12-ந்தேதி ஆண்டுதோறும் தே.மு.தி.க. சார்பில் கொடி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இன்று 20-ம் ஆண்டு கொடி நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள 118அடி உயர கொடி கம்பத்தில் கட்சியின் கொடியை விஜயகாந்த் ஏற்றினார்.

    பின்னர் தொண்டர்கள் அனைவருக்கும் லட்டு வழங்கினார். இதில் பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர்கள் பார்த்தசாரதி, எல்.கே சுதீஷ், மதுரவாயல் பகுதி செயலாளர் சதிஷ்காந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தொண்டர்கள் முன்னிலையில் விஜயகாந்த் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.

    விழா மேடையில் விஜயகாந்த்-பிரேமலதா

    விழாவில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    ஒட்டு மொத்த இளைஞர்கள், தளபதிகளை கொண்ட ஒரே இயக்கம் தே.மு.தி.க. தான். வீடு தேடி ரே‌ஷன் பொருட்கள் வரும் என்பதை முதன் முதலில் விஜயகாந்த் கூறியதை தான் ஜெகன்மோகன் ரெட்டி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் பின்பற்றி வருகின்றனர்.

    இனி வரும் காலங்களில் மக்கள் தே.மு.தி.க.விற்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும், கூட்டணி தர்மத்தை மதிக்கின்ற கட்சி தே.மு.தி.க. அதை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.

    இல்லையென்றால் அது எதிர் அணிக்கு சாதகமாகி விடும், வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த முதல்வருக்கு நன்றி.

    எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள் வந்தாலும் தே.மு.தி.க. என்ற கட்சி வருகிற 2021-ம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கேப்டன் தலைமையில் நல்லதொரு ஆட்சியை மக்களுக்கு தருவோம் என்றார்.

    இறுதியாக விஜயகாந்த் பேசுகையில், “அனைவருக்கும் என்னுடைய கொடி நாள் வாழ்த்துக்கள்” என்றார்.
    Next Story
    ×