search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    திருவாரூர், நாகை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ்?

    திருவாரூர்-நாகை மாவட்டத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனை மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    திருவாரூர்:

    சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

    இதனால் அச்சத்தின் பிடியில் உலக நாடுகள் உள்ளன. இந்தியாவுக்கு, சீனாவில் இருந்து வருகின்ற ஒவ்வொருவரும் மருத்துவர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள முதன்மை மருத்துவ மனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு இதற்காக மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் சீன நாட்டில் மென் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் ராஜா நாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவர்கள் உயர் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து திருவாரூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராஜாவை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கான ரத்த பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது

    ஏற்கனவே திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த அசோக்குமார் மற்றும் நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பது குறித்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

    இதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வார்டில், மருத்துவ குழுவை சேர்ந்த 5 பேரை தவிர யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    மேலும் இவருடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கிண்டியில் உள்ள ரத்த பரிசோதனை மையத்துக்கு இவருடைய ரத்தம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போது 3 பேருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் முத்துக்குமரன் தெரிவித்தார்.

    மேலும் இவர் 30 நாட்களுக்கு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×