என் மலர்

  செய்திகள்

  சிறை
  X
  சிறை

  இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: போக்சோவில் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அன்னூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  அன்னூர்:

  கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தம்பதிக்கு 20 வயதில் மகள் உள்ளார். சம்பவத்தன்று இந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த மருதாசலம்(35) என்பவர் வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

  இதனால் அதிர்ச்சியான அப்பெண் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

  பொதுமக்கள் வந்ததை பார்த்ததும் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.

  இதையடுத்து போலீசார் மருதாசலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருதாசலத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×