search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை
    X
    மேட்டூர் அணை

    குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    காவிரி கரையோர மாவட்டங்களில் தண்ணீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்துள்ளது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் தேவை குறைந்ததால் கடந்த 28-ந் தேதி தண்ணீர் திறப்பு முழுவதும் நிறுத்தப்பட்டது.

    இதையடுத்து காவிரி கரையோர மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக 29-ந் தேதி முதல் 750 கன அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்பட்டு வந்தது.இதற்கிடையே குடிநீருக்கு காவிரி கரையோர மாவட்டங்களில் தண்ணீர் தேவை அதிகரித்ததால் காவிரி ஆற்றில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    ஏற்கனவே 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 1250 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 53 கன அடியாக இருந்த நிலையில் அணையின் நீர் மட்டம் 107.30 அடியாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை வழக்கம் போல ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கவும், குடிதண்ணீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×