search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேர் கைது

    வல்லம் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்த வல்லம், திருமலை சமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதைதொடர்ந்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் வல்லம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில், வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று வல்லத்தை அடுத்துள்ள திருமலை சமுத்திரம் அருகே உள்ள பல்கலைகழகம் அருகே கண்காணிப்பு பணி மேற் கொண்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக அந்த பகுதியில் நோட்டமிட்டு கொண்டிருந்த 2 வாலிபர்களை தனிப்படை போலிசார் பிடித்தனர். அப்போது அவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை திருட வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை வேளச்சேரி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வடசென்னை கானா(வயது 20), மற்றொருவர் தஞ்சையை அடுத்த கண்டிதம்பட்டு அருகே உள்ள சொக்கலையை சேர்ந்த வீரமணி (20) என்பது தெரிய வந்தது.

    மேலும் வல்லம் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் சென்னையை சேர்ந்த கார்த்திக் கடந்த ஆண்டு கொள்ளை வழக்கு ஒன்றில் தஞ்சையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் அவரது கூட்டாளி வீரமணியுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. மேலும் கார்த்திக், வீரமணி ஆகிய இருவரையும் தஞ்சை அருகே உள்ள விளார் பகுதிக்கு அழைத்து சென்ற தனிப்படை போலீசார் அங்கே ஒரு வீட்டில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் என்கிற வட சென்னை கானா ,வீர மணி இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×