என் மலர்
நீங்கள் தேடியது "Vallam"
வல்லம்:
தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள மேட்டுப்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29). கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ளஆற்றங்கரைக்கு சென்றார். அங்கு வைத்து திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விஜயகுமாரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு விஜயகுமார் பரிதாபமாகணீ இறந்தார்.
இது குறித்து வல்லம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் குடும்ப பிரச்சினை காரணமாக விஜயகுமார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வல்லம்:
தஞ்சை மாவட்டம் வல்லம் அகிலாங்கரைதெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கம்பெனியில் வெல்டிங் வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு வேலை முடித்து விட்டு தஞ்சையில் இருந்து வல்லத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வல்லம் அருகே களிமேடு பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்ததார்.
அப்போது எதிரே வந்த போலீஸ் வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி கள்ளம்பெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






