என் மலர்tooltip icon

    செய்திகள்

    வல்லம் அருகே போலீஸ் வேன் மோதி வாலிபர் பலி
    X

    வல்லம் அருகே போலீஸ் வேன் மோதி வாலிபர் பலி

    வல்லம் அருகே போலீஸ் வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வல்லம்:

    தஞ்சை மாவட்டம் வல்லம் அகிலாங்கரைதெருவை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 22). இவர் தஞ்சையில் உள்ள ஒரு கம்பெனியில் வெல்டிங் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு வேலை முடித்து விட்டு தஞ்சையில் இருந்து வல்லத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வல்லம் அருகே களிமேடு பாலத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்ததார்.

    அப்போது எதிரே வந்த போலீஸ் வேன் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சண்முகநாதன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி கள்ளம்பெரம்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×