search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்துகுள்ளான பஸ்
    X
    விபத்துகுள்ளான பஸ்

    குன்றத்தூர் அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்த அரசு பஸ் - 30 பயணிகள் தப்பினர்

    குன்றத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் சாலை தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிந்ததில் 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    பூந்தமல்லி:

    சேலத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி அரசு பஸ் இன்று காலை 8.30 மணியளவில் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தது.

    பஸ்சை டிரைவர் கருப்பண்ணன் ஓட்டினார். கண்டக்டர் ஜெயச்சந்திரன் இருந்தார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி எதிர் திசை சாலையில் சென்று சாலையோரம் இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது.

    இதில் பஸ்சில் இருந்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பஸ் டிரைவர், கண்டக்டர், பயனி தங்கராஜ் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியே வந்தனர்.

    விபத்தில் காயமடைந்த 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் பள்ளத்தில் பாய்ந்த பஸ்சை கிரேன் மூலம் மீட்டனர். விபத்து காரணமாக தாம்பரம்-மதுரவாயல் பைபாசில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
    Next Story
    ×