என் மலர்

  செய்திகள்

  விபத்தில் பலியான யுகேஷ்குமார், பிபின்
  X
  விபத்தில் பலியான யுகேஷ்குமார், பிபின்

  கும்மிடிப்பூண்டி அருகே கார் விபத்து - வாலிபர்கள் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிடிப்பூண்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலை தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் பலியாகினர்.
  கும்மிடிப்பூண்டி:

  சென்னை ரெட்டேரி, கலெக்டர் நகரை சேர்ந்தவர் பிபின் (வயது 29). இவரது கொளத்தூரை சேர்ந்த சித்திக் (31), யுவராஜ் (29) அயனாவரத்தை சேர்ந்த யுகேஷ்குமார் (29). இவர்கள் 4 பேரும் இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் தடா அருவிக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

  காரை பிபின் ஓட்டினார். அதிகாலை 3 மணி அளவில் கும்மிடிப்பூண்டி அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கோரிமேடு என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

  அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலை தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது.

  இதில் காரை ஓட்டிச் சென்ற பிபின் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்து இருந்த யுகேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

  மேலும் அப்போது தனியாக சித்திக் மற்றும் யுவராஜ் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பலியான யுகேஷ்குமார் அயனாவரத்தில் கறிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி நிரோஷா என்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

  இந்த விபத்தால் இன்று அதிகாலை சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  விபத்து குறித்து கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×