
சமூக வலைதளமான பேஸ்புக், வாட்ஸ்அப், டிக்-டாக் போன்றவைகள் கருத்துகளை சுதந்திரமாக பரிமாறவும், திறமைகளை வெளிப்படுத்தவும் கிடைத்த வரபிரசாதமாகும். ஆனால் இது கூர்மையான இருபுற ஆயுதம்போன்றது. சில நேரங்களில் வைத்திருப்பவர்களையே கொன்று விடுகிறது.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி டிக்-டாக்கில் ஆடிப்பாடி அதிக நேரம் செலவிட்டார். இவரின் வீடியோ பதிவை பாராட்டி பல லைக், கமாண்ட்கள் வந்தன. இதனால் உற்சாகம் அடைந்த மாணவி மேலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்தார்.
இவரது டிக்-டாக் வீடியோவை பார்த்த பல்லடம் செலக்கரச்சலை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அடிக்கடி பார்த்து லைக், கமாண்ட் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் வேல்முருகன் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கினார்.
செல்போன் எண் மூலம் மாணவியை தொடர்பு கொண்டு காதல் வார்த்தைகளை அள்ளித்தெளித்தார். இதில் மாணவி மயங்கினார். இதனை பயன்படுத்திய வேல்முருகன் மாணவியிடம் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார்.
அவருக்கு உரிய தண்டணை பெற்றுத்தரவேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.
இது குறித்து பெற்றோர் கூறும்போது, செல்போன் மூலமாக பாடம் படிக்க வேண்டும் என்று கேட்டதால் மகளுக்கு கூலி வேலை செய்து செல்போன் வாங்கி கொடுத்தோம். அந்த செல்போனே மகளின் உயிரை பறித்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.