search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செவ்வந்தி பூக்கள்
    X
    செவ்வந்தி பூக்கள்

    பொங்கல் பண்டிகையையொட்டி நிலக்கோட்டை மார்க்கெட்டில் செவ்வந்தி பூக்கள் விலை உயர்வு

    பொங்கல் பண்டிகையையொட்டி நிலக்கோட்டை மார்க்கெட்டில் செவ்வந்தி பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஆண்டிப்பட்டி, குளத்துப்பட்டி, சீத்தாப்புரம், மிளகாய் பட்டி, பிள்ளையார்நத்தம், சிலுக்குவார்பட்டி, மைக்கேல்பாளையம், பச்சமலையான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பூ சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை கைகொடுத்ததால் விவசாயிகள் ஆர்வமுடன் செவ்வந்தி பூக்கள் சாகுபடி செய்தனர்.

    தற்போது அவை பூத்து குலுங்குகிறது. வண்ண செவ்வந்தி பூக்கள் அந்த வழியாக செல்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூக்கள் திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கோவில், வயல்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இதனால் பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் செவ்வந்தி பூ ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனையானது. தற்போது ரூ.80 வரை விலைபோகிறது. இதேபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    Next Story
    ×