
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், லால்பேட்டையில் கடந்த மாதம் 20-ந்தேதி அன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் சிலர் சாலையில் போட்டுவிட்டு சென்றனர். கீழே கிடந்த அந்த தேசிய கொடியை அங்கு காவல் பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீஸ்காரர் கார்த்திகேயன் பாதுகாப்பாக எடுத்து சென்றார்.
அவரது தேசப்பற்றை பாராட்டி சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதையொட்டி போலீஸ்காரர் கார்த்திகேயனை சென்னைக்கு வரவழைத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டி பரிசு வழங்கினார்.