search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "commissioner AK Viswanathan"

    சென்னையில் ஒரே நாளில் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    சென்னை:

    சென்னை நகரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டு பிடித்து கைது செய்யவும், குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 15 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

    பல்லாவரத்தில் வீட்டு உரிமையாளர்களை கட்டிப் போட்டு 135 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையை வீட்டு வேலைக்காரி மகாராணி மதுரையில் இருந்து ஆட்களை வரவழைத்து நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து மகாராணி, சுரேஷ், அருண்குமார், செல்வம் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த படித்துறை போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆயிரம்விளக்கைச் சேர்ந்த சதீஷ், புளியந்தோப்பைச் சேர்ந்த ஆனந்தன், வியாசர்பாடியைச் சேர்ந்த எல்லப்பன், பல்லாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன், யானை கவுனியைச் சேர்ந்த அஜித், பாலவாக்கத்தைச் சேர்ந்த கோபி உள்ளிட்ட 15 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×