search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை ரெயில் நிலையம்
    X
    மதுரை ரெயில் நிலையம்

    தண்டவாள பராமரிப்பு பணி: மதுரை- பழனி ரெயில் ரத்து

    தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை- பழனி ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மதுரை:

    மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி மதுரையில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய பழனி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56624) நாளை (10-ந் தேதி) முதல் 13-ந்தேதி வரை 4 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது.

    எனவே அந்த நாட்களில் பயணிகள் நலன் கருதி சிறப்பு ரெயில் மதுரையில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, 10 மணிக்கு பழனி செல்லும்.

    ராமேஸ்வரத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதுரை வழியாக ஐதராபாத் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07686) வருகிற 12-ந்தேதி ஞாயிறு அன்று காலை 5 மணிக்கு பதில் 7.45 மணிக்கு புறப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×