search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
    X
    தேர்தல் அலுவலகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

    தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் மீண்டும் புகார்

    உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் புகார் மனு அளித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகி வருகின்றன. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் குளறுபடிகள் காரணமாக வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்பட்டது. முறைகேடுகள் நடப்பதாக திமுக முகவர்கள், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று மதியம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து புகார் மனு அளித்தார்.   அதன் பின் பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின்

    உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி திமுக கூட்டணி முந்திக்கொண்டிருக்கிறது. ஆனால், திமுகவின் வெற்றியை தடுத்து நிறுத்துவதற்காக அதிமுக, போலீஸ் மற்றும் அதிகாரிகள் சதி செய்கிறார்கள். வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தாமதமாக அறிவிக்கிறார்கள் என தெரிவித்தார்.  அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனவே தேர்தல் ஆணையத்தில் வந்து புகார் அளித்துள்ளேன் என தெரிவித்தார்.

    இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாகவும், வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக அறிவிக்கப்படுவதாகவும் கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் மீண்டும் புகார் அளிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையம் அலுவலகம் வந்தார்.    அவருடன் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, கிரிராஜன் உள்ளிட்டோரும் தோத்ல் ஆணையம் வந்துள்ளனர்.  தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை தாமதமாக அறிவிக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையத்தில் மீண்டும்  புகார் மனு அளித்தார். 
    Next Story
    ×