search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ராணி
    X
    கைதான ராணி

    திருச்சியில் ‘மயக்க லட்டு’ கொடுத்து பயணிகளிடம் நகை கொள்ளையடிக்கும் பலே பெண்

    திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பரபரப்பு ‘மயக்க லட்டு’ கொடுத்து பயணிகளிடம் நகை கொள்ளையடிக்கும் பலே பெண் பறிகொடுத்தவரிடமே சிக்கிக்கொண்டார்

    திருச்சி, ஜன. 1-

    ஜன்னலை உடைத்து கொள்ளை, ஓட்டை பிரித்து கொள்ளை, வழிப்பறி கொள்ளை வரிசையில் நூதன கொள்ளையில் திருச்சியில் புதுவிதமான முறையில் கொள்ளை சம்ப வம் அரங்கேறி, அதில் தொடர்புடைய பலே பெண் ணும் கைதாகியுள்ளார். அது பற்றிய விபரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் திரு வையாறு அருகேயுள்ள ரெங்கநாதபுரம் கீழத்தெ ருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி பார்வதி. இவர் கோவை மாவட்டம் பல்ல டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் கம்பெனி யில் வேலை பார்த்து வருகி றார். இதற்காக அவர் தனது கணவர் மற்றும் மகனுடன் பல்லடத்திலேயே வசித்து வருகிறார்.

    மாதம் ஒருமுறை தனது சொந்த ஊரான ரெங்கநாத புரத்திற்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் பல்லடம் செல்வதற்காக திருச்சி மத்திய பஸ் நிலையத் திற்கு வந்தார். அங்கு தயா ராக இருந்து கோவை செல் லும் பஸ்சில் ஏறிய பார்வதி பல்லடத்திற்கு டிக்கெட்டும் எடுத்தார்.

    இதற்கிடையே பஸ் புறப் படுவதற்கு ஒருசில விநாடி களுக்கு முன்பாக அதே பஸ்சில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் ஏறினார். நேராக பார்வதியின் இருக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தார். பார்வதியிடம் நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? என்று கேட்டு ஒரு சில விபரங்களை அந்த பெண் தெரிந்துகொண்டார்.

    அப்போது தான் கோவி லுக்கு சென்றுவிட்டு வருவ தாகவும், அங்கு கொடுத்த பிரசாதம் தான் இந்த லட்டு கள் என்று கூறி தன்னுடைய கையில் வைத்திருந்த லட்டு களை அந்த பெண் காண்பித் தார். தான் ஒரு லட்டை சாப்பிட்டுக் கொண்டே, மற்றொரு லட்டை பார்வதிக்கு கொடுத்தார். அந்த பெண்ணின் மீதான நம்பிக்கையின் அடிப்படை யில் அந்த லட்டை பார்வதி வாங்கி சாப்பிட்டார்.

    இதையடுத்து ஒரு சில விநாடிகளில் பார்வதி மயங் கினார். தனக்கு என்ன நடக் கிறது என்பதை கூட அறிய முடியாத நிலைக்கு சென்ற பார்வதியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயின், வளையல்கள், மோதிரம் என 8½ பவுன் நகையை கொள்ளையடித்தார். மற்ற வர்களுக்கு சந்தேகம் வரா தபடி பார்வதியின் முகத்தை அவரது சேலை முந்தாணை யால் மூடிவிட்டார்.

    யாராவது கேட்டால் தனது உறவினர் என்றும், அவர் சோர்வாக இருப்பதால் தூங்குவதாகவும் தெரிவித்துள்ளார். நகையை நூதனமாக திருடிய அந்த மர்ம பெண் வழியில் ஏதோ ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கி சென்றுள்ளார்.

    இந்தநிலையில் அந்த பஸ் பல்லடம் பேருந்து நிலை யத்தை அடைந்துள்ளது. அங்கு பார்வதி இறங்காமல் இருந்ததை பார்த்து அருகில் வந்த கண்டக்டர் தூக்கத்தில் இருப்பதாக நினைத்து தட்டி எழுப்பியுள்ளார். ஆனாலும் அவர் விழிக்கவில்லை. மயங்கி சரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்டக்டர் பார்வதியின் செல்போனில் கடைசியாக பேசிய எண்ணை தொடர்பு கொண்டார்.

    அப்போது எதிர்முனை யில் பேசியது பார்வதியின் மகன் என்று தெரிந்தது. உடன டியாக நடந்த விபரத்தை கூறி பல்லடத்திற்கு வரு மாறு கண்டக்டர் அழைத்துள் ளார். பின்னர் பார்வதியை சிகிச்சைக்காக பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ் பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு மூன்று நாட்கள் வரையும் அவர் மயக்கம் தெளியவில்லை. ஐ.சி.யூ. வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து மயக்கத்தை தெளிய வைத் தனர். அதன்பிறகே தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் அறிந்தார்.

    பின்னர் இதுகுறித்து பார் வதி பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். ஆனா லும் சம்பவம் எங்கு, எப்படி நடந்தது என்பது தெரியாததால் போலீசார் முறையாக விசாரிக்காமல் விட்டுவிட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பார்வதி பல்லடத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல் வதற்காக திருச்சி வந்தார். மத்திய பஸ் நிலையத்தில் அவர் இறங்கியபோது, அங்கு நின்று கொண்டிருந்த தனக்கு மயக்க லட்டு கொடுத்த பெண்ணை பார்த்து விட் டார். தன்னுடன் கணவர் மற்றும் மகனும் வந்தததால் அவர்களிடம் கூறி, நைசாக சென்று அந்த பெண்ணை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அந்த பெண் தைரியமாக பார்வதியின் குடும்பத்தாரி டம் தகராறில் ஈடுபட்டார். இதைப்பார்த்த புறக் காவல் நிலைய போலீசார் அங்கு விரைந் து வந்தனர். அவர்களிடம் மயக்க லட்டு கொடுத்த நகை பறித்த விபரத்தை பார்வதி கூறி னார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீ சார் அழைத்து சென்று கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அங்கு நடத்தப்பட்ட விசா ரணையில் அவர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள காளப்பநாயக் கன்பட்டியை சேர்ந்த சுப்பி ரமணி மனைவி ராணி (வயது 40) என்பது தெரிந் தது. அவரை கைது செய்த போலீசார் நடத்தி விசார ணையில் பல்வேறு திடுக் கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பஸ் நிலையங்க ளில் இதுபோன்று மயக்க லட்டுகளை பெண் பயணி களிடம் கொடுத்து அவர்க ளிடமிருந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென் றுள்ளார்.

    கைதான ராணியிடம் இருந்து மயக்க லட்டுகள், நகை கட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய் தனர். இந்த கட்டரை கொண்டு 15 பவுன் எடை கொண்ட நகையையும் எளி தாக ராணி துண்டித்து விடுவாராம். அதேபோல் அவருக்கு துணையாகவும், உதவி செய்யவும் நிழல்போல் வரும் பரமேஸ்வரன் என்ப வர் ராணி பிடிபட்டதும் தப்பியோடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதேபோல் கடந்த 10.7.2019 அன்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளத்திற்கு சென்ற உறையூரை சேர்ந்த பெண்ணிடம் ராணி நகையை திருடியுள்ளார். பலர் இவரால் தங்கள் நகை களை இழந்துள்ளனர்.

    மேலும் ராணியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லட்டை போலீசார் பரிசோ தனைக்காக பாரன்சிங் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 3 நாட்கள் வரை மயக்கம் தெளியாமல் வைத்திருக்கும் அந்த லட்டில் என்ன வேதிப்பொருள் கலந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக போலீ சார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

    திருச்சியையே அதிர்ச் சிக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த சம்பவத்தில் ராணியிடம் நடத்தப்படும் விசாரணை யில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. * * * கைதான ராணி

    Next Story
    ×