search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட போலீசார் மீது கற்களை வீசி தாக்க முயற்சி - 3 வாலிபர்களுக்கு வலைவீச்சு

    பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட போலீசார் மீது 3 வாலிபர்கள் கற்களை வீசி தாக்க முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை போலீஸ்காரர்கள் சந்திர சேகர், இளங்கோ ஆகியோர் சம்பவத்தன்று மாலை வேல்ராம்பட்டு ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது 3 வாலிபர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ஏரிக்கரையில் அமர்ந்து மது குடித்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தட்டிக்கேட்டு அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது சரமாரியாக வீசினார்கள்.

    இதனால் அவர்களிடம் இருந்து தப்பிக்க போலீசார் முயன்ற போது தடுமாறி விழுந்தனர். அதற்குள் பொதுமக்கள் திரண்டு வரவே அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றி போலீஸ் காரர் சந்திரசேகர் முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் போலீசாரை கற்களை வீசி தாக்க முயன்றது பனித்திட்டு ஆலடி பேட்டை சேர்ந்த ராம்குமார் (32), பூரணாங்குப்பம் பாஸ்கரன் (25) மற்றும் வில்லியனூர் உத்திர வாகினி பேட் பகுதியை சேர்ந்த மணிவேல் (24) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×