search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு
    X
    வாக்குப்பதிவு

    திருச்சி-அரியலூரில் 2 வேட்பாளர்கள் மரணம்: தேர்தல் ஒத்திவைப்பு

    திருச்சி-அரியலூரில் போட்டியிடும் வேட்பாளர்கள் மரணமடைந்ததால் உள்ளாட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.பெரியப்பட்டி ஊராட்சிக்கு நாளை மறுநாள் 27-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட வார்டு எண் 2-ல் உறுப்பினராக போட்டியிட அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி( வயது 60) என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு சீப்பு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக பெரியசாமி கடந்த 21-ந்தேதி மரணமடைந்தார். இதையடுத்து வார்டு எண் 2-க்கு நடைபெற இருந்த தேர்தல் மட்டும் மாநில தேர்தல் ஆணையத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட இதர 11 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல், கிராம ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ஏற்கனவே அறிவித்தப்படி வருகிற 27-ந்தேதி நடைபெறும் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. ஜல்லிக்கட்டு பேரவை மாவட்ட தலைவரான இவரது மனைவி ஆரோக்கிய மேரி (36). பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

    கடந்த சில தினங்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அவர் நேற்று மதியம் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட் டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கீழப்பழுவூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கிய மேரி இறந்தார்.

    இதனால் அந்த வார்டில் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


    Next Story
    ×