search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் மாவட்டம்
    X
    திருப்பூர் மாவட்டம்

    திருப்பூர் மாவட்டத்தில் 301 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை

    திருப்பூர் மாவட்டத்தில் 279 பதற்றமானவை, 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளக்கோவில், மூலனூர் மற்றும் தாராபுரம் என 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் முதல் கட்டமாகவும், வருகிற 30-ந் தேதி அவினாசி, பொங்கலூர், குண்டடம், குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் 6 ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் 2-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    தேர்தலில் 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 265 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2 ஆயிரத்து 295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறுகிறது.

    இரு கட்ட தேர்தலிலும் 1704 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 279 பதற்றமானவை, 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

    அதன்படி அவினாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் 30, தாராபுரத்தில் 21, குடிமங்கலத்தில் 28, காங்கயத்தில் 16, குண்டடத்தில் 6, மடத்துக்குளத்தில் 13, மூலனூரில் 4, பல்லடத்தில் 24, பொங்கலூரில் 26, திருப்பூரில் 17, உடுமலையில் 58, ஊத்துக்குளியில் 28, வெள்ளகோவிலில் 8 என மொத்தம் 279 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். இதுபோல் பொங்கலூர் பகுதியில் 13, திருப்பூரில் 9 என மொத்தம் 22 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என தேர்தல் அதிகாரிகள் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.


    Next Story
    ×