
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஆனைமலையான்பட்டி வெள்ளைக்கரடு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் மனைவி நீலாவதி (வயது65). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் கோவிந்தன்பட்டியில் உள்ள தனது அக்கா சபரியம்மாள் வீட்டில் தங்கி உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று வீடு திரும்பிய நீலாவதி முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.20 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.