search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதலமைச்சர் பழனிசாமி
    X
    முதலமைச்சர் பழனிசாமி

    சென்னை மாநாட்டில் ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

    சென்னையில் நடைபெற்ற முதலீடு மற்றும் தொழில் திறன் மேம்பாடு மாநாட்டில் ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
    சென்னை:

    சென்னையில் முதலீடு மற்றும் தொழில் திறன் மேம்பாடு மாநாடு இன்று நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இந்த மாநாட்டில் அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில், தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களுடன் ரூ.2,892 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
    இதன்மூலம் 19,771 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்திட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    மேலும், தொழில் துறையினரின் குறைகளை தீர்ப்பதற்கான 'தொழில் நண்பன்' என்ற இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

    நாகை மற்றும் பெரும்பாக்கத்தில் புதிய ஐ.டி.ஐ. தொடங்க ஒப்பந்தம்.

    பேப்பர் போர்டு உற்பத்தியில் ரூ.515 கோடியில், 250 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் ஐடிசி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.604 கோடியில் 11 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பிஒய்டி இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    எரிசக்தி துறையில் ரூ.635.4 கோடி மதிப்பில் 4,321 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஏதர் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    எரிசக்தி உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.250 கோடி மதிப்பில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஸ்ரீவாரி எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி துறையில் ரூ.503.6 கோடி மதிப்பில் 330 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மிட்சுபா நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    கட்டுமான கருவிகள் உற்பத்தி துறையில் ரூ.98 கோடி மதிப்பில் 550 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் எஸ்என்எஃப் நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

    புட்வேர் துறையில் ரூ.175 கோடி முதலீட்டில் 3ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் க்ரோத் லிங் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
    Next Story
    ×