search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீர்ப்பு
    X
    தீர்ப்பு

    தொழிலாளி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை- புதுவை கோர்ட்டு தீர்ப்பு

    தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு இன்று தீர்ப்பு அளித்தது.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு அருகே உள்ள கரசூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (33). உறவினர்களான இவர்கள் இருவரும் கூலித்தொழில் செய்து வந்தனர்.

    குடிப்பழக்கம் உள்ள இவர்கள் சம்பவத்தன்று காலை அங்குள்ள சாராயக் கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்தனர். அப்போது ஆறுமுகம், தனது மனைவியிடம் தகராறு செய்தர்.

    இதனை அய்யப்பன் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அருகில் கிடந்த கடப்பா கல்லை எடுத்து அய்யப்பன் தலையில் தாக்கினார். இதில் அய்யப்பன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.

    இதுகுறித்து சேதராப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் நடந்து வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

    ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தலைமை நீதிபதி தனபால் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பெருமாள் ஆஜரானார்.

    ஆயுள் தண்டனை பெற்ற ஆறுமுகத்துக்கு விஜயா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×