search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திற்பரப்பு அருவி
    X
    திற்பரப்பு அருவி

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை - திற்பரப்பில் 29.8 மி.மீ. பதிவு

    குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி அதிகபட்சமாக 29.8 மி.மீ. மழை பதிவானது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வந்த நிலையில் மாவட்டம் முழுவதும் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. அவ்வப்போது மழை பெய்தது.

    மயிலாடி, கொட்டாரம், பூதப்பாண்டி, சுருளோடு, அடையாமடை, புத்தன் அணை, ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அங்கு அதிகபட்சமாக 29.8 மி.மீ. மழை பதிவானது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை பகுதிகளிலும் மழை நீடித்தது. மலையோர பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.80 அடியாக இருந்தது. அணைக்கு 466 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 303 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.04 அடியாக உள்ளது. அணைக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது

    அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.6, சிற்றாறு-1-17.6, சிற்றாறு-2-26, ஆணைக்கிடங்கு-6.6, குருந்தன்கோடு-17, அடையாமடை-8, புத்தன்அணை- 8.8, திற்பரப்பு-29.8, நாகர்கோவில்-5.8, பூதப்பாண்டி-2.2, சுருளோடு-23.2, கன்னிமார்-11.2, ஆரல்வாய்மொழி-17, பாலமோர்-11.8, மயிலாடி-21.6, கொட்டாரம்-26.2.

    Next Story
    ×