என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காலாப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
Byமாலை மலர்15 Nov 2019 10:19 AM GMT (Updated: 15 Nov 2019 10:19 AM GMT)
காலாப்பட்டு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை பெரிய காலாப்பட்டு வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 75). இவர் சம்பவத்தன்று காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கீழ்புத்துப்பட்டு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக ரங்கநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட ரங்கநாதன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரங்கநாதன் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×