search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணா தண்ணீர்
    X
    கிருஷ்ணா தண்ணீர்

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்தது

    கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், பின்னர் 11-ந் தேதி புழல் ஏரிக்கும் இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 1-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி கால்வாயில் நெல் சாகுபடிக்காக தண்ணீர் எடுப்பதால் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 150 கனஅடி நீர் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    செப்டம்பர் 28-ந் தேதி முதல் சராசரியாக வினாடிக்கு 800 கனஅடி வீதம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    கிருஷ்ணா நதிநீர் வரத்து குறைந்ததால் பூண்டி ஏரியிலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு இன்று காலை குறைக்கப்பட்டது.

    இத்தனை நாட்களாக 830 கனஅடியாக திறக்கப்பட்ட நீர் இன்று காலை 713 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

    இதில் புழல் ஏரிக்கு 390 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 323 கனஅடியும் அனுப்பப்படுகிறது.

    ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை அங்குள்ள குளங்கள், ஏரிகளில் நிரப்பி வருகின்றனர்.

    இன்னும் ஒரு வாரத்தில் குளங்கள், ஏரிகள் முழுவதுமாக நிரம்பிவிட வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 28. 65 அடியாக பதிவானது. 1446 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    Next Story
    ×