search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பெண் ஊழியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி - பிரிந்து சென்ற கணவர் மீது புகார்

    போலி கையெழுத்திட்டு மின்துறை பெண் ஊழியரிடம் ரூ.24½ லட்சம் மோசடி செய்ததாக பிரிந்து சென்ற கணவர் மீது புகார் கூறப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை கால்லரைவீதியில் வசித்து வருபவர் ஜான்சி ராணி (வயது43). இவர் புதுவை மின்துறையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் புதுவை சுகாதாரத் துறையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பாகூர் பழைய காமராஜர்நகரை சேர்ந்த பிரபாகரன்(42) என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஜான்சிராணி புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்க வங்கி கடன் உதவியை நாடினார். அப்போது ஜான்சிராணியின் பெயரில் ஏற்கனவே ரூ.24½ லட்சத்து 52 ஆயிரத்து 645 வங்கி கடன் உள்ளதால் மோட்டார் சைக்கிள் வாங்க கடன் உதவி அளிக்க மறுத்து விட்டனர்.

    இதனை கேட்டு ஜான்சிராணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் விசாரித்த போது தனக்கு தெரியாமல் பிரிந்து சென்ற கணவர் பிரபாகரன் தனது பெயரை போலியாக கையெழுத்திட்டு தனியார் வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து ஜான்சிராணி பணம் மோசடி செய்த பிரபாகரன் மீது முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×