search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூண்டி ஏரி
    X
    பூண்டி ஏரி

    38 நாட்களில் பூண்டி ஏரிக்கு 2 டி.எம்.சி. தண்ணீர் வந்தது

    கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதியில் இருந்து இன்று காலை வரை 38 நாட்களில் 2.135 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. ஏரிக்கு கடந்த செப்டம்பர் 28-ந்தேதியில் இருந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயிலும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 29. 70 அடியாக பதிவானது. 1671 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் 296 கன அடியும், மழை நீர் 216 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    லிங்க் கால்வாயில் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 730 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதியில் இருந்து இன்று காலை வரை 38 நாட்களில் 2.135 டிஎம்சி கிருஷ்ணா தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×