search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் அரிசி பறிமுதல்
    X
    ரேசன் அரிசி பறிமுதல்

    பொன்னேரி ரெயில் நிலையத்தில் 1½ டன் ரே‌சன் அரிசி பறிமுதல்

    பொன்னேரி ரெயில் நிலையத்தில் 1½ டன் ரே‌சன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி ரெயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்தபடுவதாக பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து பொன்னேரி வட்ட வழங்கல் அதிகாரி செல்வகுமார், ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் பொன்னேரி ரெயில்நிலையத்தில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு 30 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 1500 கிலோ ரே‌சன் அரிசி மறைத்து ஆந்திராவுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அரிசி பறிமுதல் செய்யப்பட்டு தச்சூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட அரிசி எந்த ரே‌சன் கடையில் வாங்கப்பட்டது. அதனை கடத்தியவர்கள் யார்? ரே‌சன் கடை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பொன்னேரி பகுதியில் ரே‌சன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    Next Story
    ×