search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலில் கவிழ்ந்த படகு (கோப்பு படம்)
    X
    கடலில் கவிழ்ந்த படகு (கோப்பு படம்)

    மாலத்தீவு அருகே கடலில் தோணி மூழ்கியது- 9 பேர் பத்திரமாக மீட்பு

    தூத்துக்குடியில் இருந்து சென்ற தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கிய நிலையில், அதில் பயணித்த 9 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. சூறைக்காற்று வீசும் என்பதால் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து உணவு பொருட்கள் ஏற்றிச்சென்ற ஒரு தோணி மாலத்தீவு அருகே கடலில் மூழ்கியது. அப்போது, மாலத்தீவிலிருந்து தூத்துக்குடிக்கு சரக்கு ஏற்றிவந்த மற்றொரு தோணியில் இருந்தவர்கள் இதனைக் கவனித்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 9 பேரையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் இன்று தூத்துக்குடி வந்து சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×