search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாங்குநேரி தொகுதியில் ஓட்டு போட காத்திருந்த வாக்காளர்கள்
    X
    நாங்குநேரி தொகுதியில் ஓட்டு போட காத்திருந்த வாக்காளர்கள்

    தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்

    தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் ஒரு மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தின் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் தொடங்கி நடந்து வருகிறது. வாக்காளர்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

    காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில்12.84% வாக்குகள் பதிவாகின.  நாங்குநேரி தொகுதியில் 18.41% வாக்குகளும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9.66% வாக்குகளும் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 32.54 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 23.89 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன. புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில்  28.17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    அதன்பின்னர் வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்படைந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 54.17 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நாங்குநேரியில் 41.35 சதவீதமும், புதுவை காமராஜ் நகர் தொகுதியில் 42.71 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன.

    Next Story
    ×