search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    கூடுதல் தண்ணீர் திறப்பு - வைகை ஆற்றில் மூழ்கி விவசாயி பலி

    கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் மூழ்கி விவசாயி பலியானார்.
    நிலக்கோட்டை:

    மூல வைகையாற்று பகுதியில் பெய்த கன மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் சீராக உயர்ந்து வருகிறது.

    வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாய பாசனத்திற்காக 2030 கன அடி நீர் திறக்கப்படுகிறது. கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் ஏ. வாடிப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிவேல் (வயது68). விவசாயி.

    இவர் பெரியாறு பிரதான கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆண்டிவேலை தேடும் பணி நடைபெற்றது. நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். மட்டப்பாறை அருகே ஆண்டிவேலை பிணமாக மீட்டனர்.

    தண்ணீரில் மூழ்கிய விவசாயி பலியாகி உள்ளார். அவரது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விளாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×