search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிந்தன் குடுகுடுப்பை வேடம் அணிந்து பெண்களிடம் ஓட்டு கேட்கும் காட்சி.
    X
    கோவிந்தன் குடுகுடுப்பை வேடம் அணிந்து பெண்களிடம் ஓட்டு கேட்கும் காட்சி.

    விக்கிரவாண்டி பகுதியில் குடுகுடுப்பை வேடம் அணிந்து திமுக பேச்சாளர் வாக்கு சேகரிப்பு

    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக பேச்சாளர் கோவிந்தன் வாக்கு சேகரித்து வருகிறார்.
    விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள். 

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது 48) என்பவர் குடுகுடுப்பை வேடம் அணிந்து பிரசாரம் செய்து வருகிறார். இவர் தி.மு.க. கழக பேச்சாளர் ஆவார். கோவிந்தன் கடந்து 5-ந் தேதி முதல் குடுகுடுப்பை வேடம் அணிந்து பிரசாரம் செய்து வருகிறார். அதிகாலை 4 மணி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார். இவர் திருவாலை, ஏழுசெம்பொன், செம்மேடு, வி.சாத்தனூர், கல்பட்டு, பனமலை, கஞ்சனூர், விராட்டிக்குப்பம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கிறார். 

    ஒவ்வொரு வீட்டின் முன்பும் குடுகுடுப்பை அடித்து தி.மு.க. சாதனைகளை கூறி ஓட்டு கேட்டு வருகிறார். இந்த பிரசாரம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
    Next Story
    ×